Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு நாளுக்கு ஒரு லட்சம் பாதிப்புகள்; 29 லட்சத்தை தாண்டிய கொரோனா!

இரண்டு நாளுக்கு ஒரு லட்சம் பாதிப்புகள்; 29 லட்சத்தை தாண்டிய கொரோனா!
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (09:57 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இரண்டு நாளுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் என பதிவாகி வரும் நிலையில் மொத்த பாதிப்பு 29 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மொத்த கொரோனா பாதிப்புகள் 29,05,823 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 54,849 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து பூரண குணம் பெற்றவர்கள் எண்ணிக்கை 21,58,946 ஆக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடை ஊழியரை கொலை செய்த ஜோதிடர்? கோவில் வளாகத்தில் பிணம்! – கடலூரில் பரபரப்பு!