Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனத்தை அளித்த பாவிகளான காங்கிரஸ் தயவில் நான் எம்.பி. ஆகவில்லை: வைகோ ஆதங்கம்

Advertiesment
இனத்தை அளித்த பாவிகளான காங்கிரஸ் தயவில் நான் எம்.பி. ஆகவில்லை:  வைகோ ஆதங்கம்
, வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (17:47 IST)
கே.எஸ்.அழகிரியின் கருத்து குறித்து வைகோ செய்தியாளர்களிடம் ஆதங்கமாக பேசியுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து, மாநிலங்களவையில் கடுமையாக எதிர்த்து பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை கொலை செய்த கட்சி என குற்றம் சாட்டினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ ஒரு அரசியல் நாகரீகமற்ற நபர் எனவும், அமித்ஷாவின் தூண்டுதலால் தான் அவ்வாறு பேசினார் எனவும் குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸின் தயவால் தான் வைகோ எம்.பி. ஆனார் எனவும் கூறினார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, தான் காஷ்மீர் குறித்த வாக்கெடுப்பில் எதிராகவே வாக்களிப்பேன் என மோடியிடமே கூறியதாகவும், இனத்தை அளித்த பாவிகளான காங்கிரஸ் தயவில் தான் எம்.பி. ஆகவில்லை என்றும் கடுமையாக சாடினார்.
webdunia

மேலும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தியபோது, 12 காங்கிரஸ் எம்.பி.கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றும், அவர்களெல்லாம் பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்து விட்டார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அற்ப புத்தி உள்ளவர்களுக்கு பதில் கூற தனக்கு எந்த அவசியமும் இல்லை எனவும் வைகோ காட்டமாக பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாகரன் இறந்ததற்கு காரணமே வைகோதானா? – கே.எஸ்.அழகிரி பேச்சால் சர்ச்சை