Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் பிரபாகரனை சந்தித்தது 2 நிமிடங்கள் தான்: வைகோ

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:43 IST)
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து ஆவேசமாக கடந்த பல ஆண்டுகளாக சீமான் பேசி வருகிறார் என்பதும் பிரபாகரனுடன் தான் நெருங்கி பழகி உள்ளதாகவும் போர்ப் பயிற்சியை நேரில் பார்த்ததாகவும் அவருடன் உட்கார்ந்து சாப்பிட்டதாகவும் குறிப்பாக ஆமைகறி சாப்பிட்டதாகவும் சீமான் பல மேடைகளில் கூறியுள்ளார் 
 
சீமானின் இந்தப் பேச்சுக்கள் குறித்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று கூட்டமொன்றில் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிரபாகரனை சீமான் 2 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் என்றும் புகைப்படம் எடுக்க கூட அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது என்றும் மற்றபடி ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று கூறுவது அனைத்தும் பொய் என்றும் வைகோ கூறியுள்ளார்
 
மேலும் விடுதலைப்புலிகள் சீமான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்றும் பிரபாகரன் குறித்தும் விடுதலைப் புலிகள் குறித்தும் பொய்யான செய்திகளை சீமான் கூறி வருகிறார் என்றும் வைகோ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments