Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமான் தொட்டதால் தீட்டு... அலப்பறை பண்ணும் காங்கிரஸார்!

Advertiesment
தக்கலை
, திங்கள், 11 அக்டோபர் 2021 (13:31 IST)
காங்கிரஸார் காமராஜருக்கு சீமான் செலுத்திய மாலை தூக்கி எறிந்து சிலையை சுத்தம் செய்து பாலபிஷேகம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து தக்கலை முன்பு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு முன்னர் தக்கலை பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
 
இந்நிலையில் காங்கிரஸார் சீமான் செலுத்திய மாலை தூக்கி எறிந்து சிலையை சுத்தம் செய்து பாலபிஷேகம் செய்தனர். இது குறித்து தேசிய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கூறியதாவது, பிரிவினைவாதி சீமான் தக்கலை பகுதியில் வந்து நாங்கள் தெய்வமாக வணங்கும் தலைவர் காமராஜருடைய திரு உருவ சிலையை தொட்டு தீட்டு படுத்தியதை பார்த்து மனம் குமுறி அந்த சிலையை சுத்தம் செய்து பாலபிஷேகம் செய்துமாலை அணிவித்து நன்னெறி நடத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி போட்டிருந்தா மட்டும்தான் சரக்கு..! – அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!