Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச்.ராஜாவுக்கு விருந்து...கோபாலுக்கு கைதா? - வைகோ விளாசல்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (12:51 IST)
நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது ஆளுநர் மாளிகை புகார் கொடுத்தது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 
நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல், அவரை சந்திக்க சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற வைகோவை போலீசார் தடுத்தி நிறுத்தினர். ஒரு வழக்கறிஞராக அவரை சந்திக்க வந்துள்ளேன். என்னை தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என வைகோ கூறியும், கோபாலை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “காவல்துறையையும், நீதித்துறையையும் கேவலமாக விமர்சித்த ஹெச்.ராஜாவை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் விருந்து கொடுக்கிறார். ஆனால், நக்கீரன் கோபால் மீது புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ளார். ஆளுநரின் கைப்பாவையாக காவல் துறை மாறிவிட்டது. இது பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். எனவே, ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
இதைத் தொடர்ந்து அவரையும் கைது செய்த போலீசார் வேனில் அவரை அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments