Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: வேல்முருகன், வைகோ கண்டனம்

vaiko
, செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (15:12 IST)
நக்கீரன் பத்திரிகையின் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
நக்கீரன் பத்திரிகையின் மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் மற்றும் கேமராமேன் அஜித் குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியை இறப்பு குறித்து புலனாய்வு செய்ததாக தெரிகிறது.
 
இதனையடுத்து இருவர் மீதும் மர்ம கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. 15 கிலோ மீட்டர் தூரம் வரை இருவரையும் விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது
 
இந்த தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் பத்திரிகை ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
 அதேபோல் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணவு ஆர்டர் செய்த இளம் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம்: ஜொமைட்டோ ஊழியர் கைது!