Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது.. தமிழ்நாடு அரசு உத்தரவு!

Mahendran
வியாழன், 30 ஜனவரி 2025 (10:12 IST)
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது. அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில்  பட்டாசுகளை வெடிக்க கூடாது. இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம் செய்ய்ப்பட்டுள்ளனர்.

ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யமுனை நதியில் விஷம்?! 14 பக்க அறிக்கையை காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்! - தேர்தல் ஆணையத்தின் ரியாக்‌ஷன் என்ன?

சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம்.. ஒரு நபருக்கு ரூ.1.25 லட்சம்..! - விண்ணப்பிப்பது எப்படி?

எவ்வளவு பணம் எண்ண முடிகிறதோ, அவ்வளவும் போனஸ்.. சீன நிறுவனத்தின் வித்தியாசமான அறிவிப்பு..!

சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி கொலை.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. எந்த இணையதளத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments