அண்ணா அறிவாலயத்தில் திடீர் ஆலோசனை கூட்டம். ஸ்டாலின் பங்கேற்பு

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (13:44 IST)
திமுக தலைவராக இருந்த கருணாநிதி சமீபத்தில் காலமான நிலையில் அவருடைய பதவியில் விரைவில் மு.க.ஸ்டாலின் ஏற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இதுகுறித்து முடிவெடுக்க அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி திமுகவின் அவசர செயற்குழு கூடவுள்ளது.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
 
திமுகவின் அவசர செயற்குழு இன்னும் இரண்டு நாட்களில் கூடவுள்ள நிலையில் தற்போதைய இந்த ஆலோசனை கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments