Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை

அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (10:00 IST)
பன்னீர் செல்வம், பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 

 
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்றது. மேலும், எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து நேற்று கூட்டறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ் – ஓபிஎஸ், அதிமுக அமைப்பு செயளாலர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது மக்கள் நலப்பணிகளில் திமுக அரசு கவனம் செலுத்தாமல், அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறதோ என ஐயம் எழ செய்கிறது.
 
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சந்திக்க கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால் ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து இன்று ஓ.பன்னீர் செல்வம், பழனிசாமி  தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். வேலுமணியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு! – முதல்வர் விருது!