Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பொங்கலுக்கு பின் தேதி அறிவிப்பு!

Advertiesment
2 கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பொங்கலுக்கு பின் தேதி அறிவிப்பு!
, செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:57 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் வரும் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த தேர்தலை 2 கட்டமாக தமிழகம் முழுவதும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
பொங்கல் முடிந்த உடன் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னணு தகவல் பலகை: நாளை முதல் பயன்படுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்!