Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கே.பி.ராமலிங்கம் அழகிரியின் தீவிர ஆதரவாளர்: டைம் பார்த்து அடித்த தலைமை?

கே.பி.ராமலிங்கம் அழகிரியின் தீவிர ஆதரவாளர்: டைம் பார்த்து அடித்த தலைமை?
, செவ்வாய், 31 மார்ச் 2020 (13:59 IST)
கே.பி.ராமலிங்கம் தனது கட்சிக்கு எதிராக பேசியதற்கான காரணம் என்னவென தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதில் உள்ள குறைகள், செய்யவேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதிக்க கே.பி.ராமலிங்கம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 
 
ஆனால், இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்க மறுத்தார். அதோடு, திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம் ‘கொரோனா பரவியுள்ள இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது அவசியமற்றது’ என்று பேட்டியளித்தார். 
webdunia
இதனால் கே.பி.ராமலிங்கத்தை பதவியிலிருந்து விலக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் கே.பி.ராமலிங்கம் நீடிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கே.பி.ராமலிங்கம் அப்படி பேசியதற்கான காரணம் என்னவென தகவல் வெளியாகியுள்ளது. கே.பி.ராமலிங்கம் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவியவர். 2006 - 2011 ஆம் ஆண்டு காலத்தில் தென்னை விவசாயிகள் நல வாரிய தலைவராகவும், திமுக ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்தவர். 
 
இவர் முக அழகிரியின் தீவிர ஆதரவாளர், அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்ட போது அதனை இவர் கடுமையாக எதிர்த்ததால் ஸ்டாலினின் வெறுப்புக்கு ஆளானவர். அதேபோல தற்போது ராஜ்சபா சீட் கேட்டு மறுக்கப்பட்டதால் அதிருப்தியிலும் இருந்துள்ளார். எனவே இந்த பேச்சை இவர் பேச கடுப்பான தலைமை பதவியை பறித்ததாக கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனம் திருந்திய விஜய் மல்லையா ..? ரூ.12ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க சம்மதம் !