Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடூரமான பாலியல் வன்கொடுமை -டி.டி.வி. தினகரன்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (14:31 IST)
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர்  டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால்  வன்முறை செய்த  வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலாகி ஆகி வருகிறது.

நாட்டையே அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அதேபோல், மணிப்பூர் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கைஎடுக்க  டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

''மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள், ஒரு கும்பலால் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இருவேறு இனக்குழுக்களுக்கு இடையே நடைபெறும் மோதலின் போது கடந்த மே மாதம் 4ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதாக மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியின தலைவர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்