Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்.! அனைத்து செயற்பொறியாளர்களுக்கு பறந்த உத்தரவு..!!

Advertiesment
TN EB

Senthil Velan

, திங்கள், 3 ஜூன் 2024 (13:50 IST)
தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் நாளையும், நாளை மறுநாள் வரையிலும், தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
 
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. 
 
இதனை முன்னிட்டு தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் நாளையும், நாளை மறுநாளும்  தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

 
இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறையில், துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள், சப்ளையை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், கட்டுபாட்டு ஒருங்கிணைத்து விரைவாக மறுசீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை படுஜோர்..! அதிகாரிகள் அதிரடி சோதனை..!!