தானாக சுட்ட பெண் காவலரின் துப்பாக்கி.. சென்னை ரிசர்வ் வங்கியில் பரபரப்பு..!

Mahendran
சனி, 26 அக்டோபர் 2024 (15:56 IST)
சென்னை ரிசர்வ் வங்கியில் பெண் காவலர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து குண்டு தானாக சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இன்று அதிகாலை திடீரென அலாரம் ஒலித்தது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர், பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை போட்டு உள்ளார். 
 
தொடர்ந்து வங்கி முழுவதும் அவர் சோதனை செய்து பார்த்ததில் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், அலாரம் எதனால் அடித்தது என்றும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களை அவர் மீண்டும் வெளியே எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி தானாகவே சுட்டது; அதில் ஒரு தோட்டா எதிரில் இருந்த சுவரின் மீது பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில், அலாரம் ஏன் அடித்தது, துப்பாக்கியில் இருந்து தோட்டா தானாகவே வெளியேறியது எப்படி என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments