உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில், அவரின் மனைவி கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
உடுமைலைப்பேட்டி அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர், பழனியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். அந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பட்டப்பகலில் அவர்கள் இருவரையும் ஒரு கும்பல் நடுரோட்டில் அரிவாளால் வெட்டி சாய்த்தது.
இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதி அலமேலு நடராஜன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானது. அதன் பின் 8 பேர் குற்றவாளி என செய்திகள் வெளியானது. அதாவது, கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், செல்வகுமார், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல்ராஜ் ஆகிய 6 பேருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளர்.