அதிமுக மாநாடு நடத்தல.. கலை நிகழ்ச்சிதான் நடத்தினாங்க! – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (09:41 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக மாநாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.



அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையேயான பிளவிற்கு பிறகு கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளில் எடப்பாடி பழனிசாமி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அதிமுகவை மீண்டும் புத்துணர்வாக்கும் வகையில் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு கடந்த 20ம் தேதி நடத்தப்பட்டது.

பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் உணவுகள் வீணடிக்கப்பட்டதாக வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகியது. மேலும் மாநாட்டில் பல பிரச்சினைகளும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அதிமுகவின் இந்த மாநாடு அதிமுகவின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில் இந்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “மதுரை அதிமுக மாநாடு செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தியே புளிசாதம் நல்லா இருந்ததா? தக்காளி சாதம் நல்லா இருந்ததா? என்பது பற்றிதான். ஒரு மாநாடு எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு அதிமுக மதுரை மாநாடு. அதிமுகவிற்கு வரலாறு இல்லாததால் மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள்தான் நடந்தது” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

2 நாட்களில் 200 விமானங்கள் ரத்து.. கிளம்புவதிலும் தாமதம்.. என்ன நடக்குது இண்டிகோ?

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments