Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல், திருமாவளவனை அடுத்து சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்த உதயநிதி!

Advertiesment
கமல், திருமாவளவனை அடுத்து சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்த உதயநிதி!
, செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (22:34 IST)
சென்னையில் அதிமுக பிரமுகர் வைத்த பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய நிலையில் இன்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீயின் பெற்றோர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
 
 
சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் உதயநிதி, பின்னர் சந்தித்து பேசியபோது, ‘திருமணம் முடிந்தும் பேனர்களை அகற்றாமல் இருந்ததே விபத்திற்கு முக்கிய காரணம் என்று கூறினார். மேலும் நேற்று நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மக்ளுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கட்அவுட் பேனர் உள்ளிட்டவை வைக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளோம். இது ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு சுபஸ்ரீயை இது போல் நாம் இழக்கக்கூடாது. என்னதான் ஆறுதல் சொன்னாலும் சுபஸ்ரீயின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. 
 
 
எனவே கண்டிப்பாக பொதுமக்களும் சரி, திராவிட முன்னேற்ற கழகத்தினரும் சரி பிளெக்ஸ் பேனர் உள்ளிட்ட கட்அவுட் வைக்க கூடாது. மற்ற அனைத்து கட்சியினரும் சரி, இனி யாருமே பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என்ற தீர்க்கமாக இருக்க வேண்டும். பள்ளிக்கரணை சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. திருமணம் முடிந்து 3 நாட்கள் ஆகியும் பேனரை எடுக்காமல் இருந்திருக்கிறார்கள். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும். மீண்டும் இது போல் தவறு நடக்கக்கூடாத அளவுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்" என்று உதயநிதி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவால் இந்தி எதிர்ப்பில் வெற்றி பெற முடியாது: கே.டி.ராகவன்