நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கிலோ ரூ.130 வரை விற்கப்படும் தக்காளி வட மாநிலங்களில் கிலோ ரூ.250 வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்துகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிப்போடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், ஒன்றிய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள் & இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.