தொடர்ந்து கைது செய்யும் போலீஸ்; விடாமல் பிரச்சாரம் செல்லும் உதயநிதி!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:03 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி ஈடுபடுவதாக இன்று உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையிலிருந்து 100 நாட்கள் தொடர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி இன்று மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் பிரச்சாரம் செய்ய முயன்ற உதயநிதி ஸ்டாலினை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதார் விவரங்களை மாற்ற, புதுப்பிக்க எவ்வளவு கட்டணம்.. முழு விவரங்கள்..!

நிறைய ஓட்டு விழுந்திருக்கு!.. தவெகவுக்கு சாதகமாக களம் இருக்கு!.. வைகோவே சொல்லிட்டாரே!...

மாணவர்களின் 3 லட்சம் தேர்வு தாள்களை மூன்றே நாட்களில் திருத்திய ஏஐ.. பெரும் சாதனை..!

4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப Cognizant முடிவு.. AI தொழில்நுட்பத்தால் இன்னும் என்னென்ன நடக்குமோ?

அடுத்த கட்டுரையில்
Show comments