Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆமாம் நான் நிற்கிறேன்... என்ன இப்போ: உதயநிதி அரசியல் தடாலடி

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (13:25 IST)
அதிமுகவை எதிர்த்து திமுக இரண்டு நாட்களுக்கு கண்டன கூட்டத்தை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நடந்த திமுக கண்டன கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.
 
இதற்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக என்பது கட்சி இல்லை அது ஒரு கம்பெனி. திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின் அவருக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது தலைதூக்க துவங்கிவிட்டார் என விமர்சித்தார். 
 
இதற்கு டிவிட்டர் ஏற்கனவே, சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளிகூட தகுதி இல்லை என்று காட்டமாக உதயநிதி பதிலடி கொடுத்திருந்தார். 
 
இருப்பினும் தற்போது கோவை கண்டன கூட்டத்தில் மீண்டும் பதில் அளித்துள்ளார். அதில் உதயநிதி கூறியது, தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எல்லா அமைச்சர்களுமே ஊழல் புரிகின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும்.
 
என்னை அமைவரும் திமுகவின் அரசியல் வாரிசு என்கிறார்கள். ஸ்டாலினுக்கு பின்னாடி அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் வரிசையில் நிற்கிறேன் என்றும் சொல்கிறார்கள். 
 
ஆமாம்... நான் வரிசையில்தான் நிற்கிறேன். ஆனால் கட்சி தலைமை பதவிக்கோ, எந்த உயர்ந்த பதவிக்கோ வரிசையில் நிற்க மாட்டேன். எப்போதும் திமுகவின் தீவிர தொண்டனாக நின்று தோள் கொடுக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன் என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments