முடிஞ்சா மக்களை வந்து சந்தியுங்கள்! – பிரதமர் மோடிக்கு உதயநிதி சவால்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (12:35 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பேசி வரும் உதயநிதி, பிரதமருக்கு தைரியம் இருந்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைக்கட்டும் என பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தாராபுரத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, முதல்வர் தாயார் குறித்து ஆ.ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், திமுகவில் உதயநிதிக்கு பதவி வழங்குவதற்காக பல முக்கிய நபர்கள் ஒதுக்கப்பட்டதாகவும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிரச்சாரத்தில் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் “இந்திய வரலாற்றிலேயே இதுவரை ஒரு பத்திரிக்கை பேட்டி கூட அளிக்காத ஒரே பிரதமர் மோடிதான். உங்களால் முடிந்தால் எங்கள் மக்களை வந்து சந்தியுங்கள் அல்லது 10 பத்திரிக்கையாளர்களையாவது சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்” என சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு!. 50க்கும் மேற்பட்டோர் பலி!..

ஒரே நாளில் 10 ஆயிரம் விருப்ப மனுக்கள்!.. சி.டி.நிர்மல் குமார் பேட்டி...

உபேர், ஓலா, ரேபிடோ ஓட்டுனர்கள் நாளை ஸ்டிரைக்!..

பிப்ரவரி 20ல் டாடா வெளியிடும் Punch EV காரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு.. என்னென்ன சிறப்புகள்..

தொழுகை முடிந்ததும் தற்கொலைப்படை தாக்குதல்.. பாகிஸ்தானில் 25 பேர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments