Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்த காடுவெட்டி குரு வீட்டில் உதயநிதி!

Advertiesment
கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்த காடுவெட்டி குரு வீட்டில் உதயநிதி!
, செவ்வாய், 22 டிசம்பர் 2020 (21:07 IST)
காடுவெட்டி குரு வீட்டில் உதயநிதி!
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் காடுவெட்டி குரு என்பது தெரிந்ததே. காடுவெட்டி குரு பாமகவில் முக்கிய பதவியில் இருந்தபோது கருணாநிதியையும் திமுகவையும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும், கருணாநிதியை கோமாளி என்றும் கருணாநிதியின் தலையை எடுத்து விடுவேன் என்றும் பேசியவர் காடுவெட்டி குரு என்பதை யாராலும் மறக்க முடியாது 
 
இந்த நிலையில் சமீபத்தில் காடுவெட்டி குருவின் மகன் கடலரசன் திமுகவில் இணைந்ததை அடுத்து திமுகவுக்கும் காடுவெட்டி குருவின் குடும்பத்திற்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது காடுவெட்டி குருவின் வீட்டிற்கு சென்று அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது அதுமட்டுமின்றி காடுவெட்டி குருவின் தாயாரிடம் உதயநிதி ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பதாவது: அரியலூர்(மா) காடுவெட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த அண்ணன் காடுவெட்டி குரு அவர்களின் இல்லம் சென்று அவருடைய திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தேன். அண்ணனின் தாயார் என்னை வாழ்த்திமகிழ்ந்தார். அண்ணனின் மகன் தம்பி கனலரசன் மென்மேலும்வளர வாழ்த்து தெரிவித்தேன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின் ஊழியர்கள் பணம் கேட்டால் புகார் அளிக்கலாம் !