முதல்வரின் அறிக்கையை யாரும் நம்ப மாட்டார்கள்: உதயநிதி ஸ்டாலின்

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (20:16 IST)
சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது லாக்கப் மரணம் தான் என்றும் போலீசார் இருவரையும் கொன்று விட்டார்கள் என்றும் பரவலாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்
 
அந்த அறிக்கையில் இருவரும் உடல்நலக் குறைவால் அடுத்தடுத்து மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
பென்னிக்ஸ் மூச்சுத்திணறலால், ஜெயராஜ் உடல்நலக்குறைவால் இறந்தனர்’. இது தமிழக முதல்வர் அவர்களின் விளக்கம். இவர் எப்படி முதல்வரானார் என்ற பின்னணி தெரியாதவர்கூட இவ்விளக்கத்தை நம்பமாட்டார்கள். இயற்கை மரணமெனில் மூவர் பணியிடைநீக்கம், இன்ஸ்பெக்டரை கட்டாய காத்திருப்புக்கும் அனுப்பியது ஏன்? என உதயநிதி தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments