Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்த உதயநிதி!

கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்த உதயநிதி!
, ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (21:38 IST)
சமீபத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு அதில் 80 தொழிலாளர்கள் வரை சிக்கிக் கொண்டனர் என்பது தெரிந்ததே. தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 
 
இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதி உள்ளவர்களை தேடும் பணியில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 6 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி நிலச்சரிவில் சிக்கிய 
 
பெரும்பாலும் தமிழர்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கேரளா இடுக்கி நிலச்சரிவில் பலியானவர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக்கொண்ட தேயிலை 
 
தோட்ட தொழிலாளர்கள். மீட்புப்பணி காட்சிகள் பதறவைக்கின்றன. இறந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்தஇரங்கலை தெரிவிக்கும்வேளையில், நிவாரணம், மறுவாழ்வுக்கு கேரள அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனிமொழியை இந்தியரா என கேட்ட விவகாரம்: விசாரணை செய்ய உத்தரவு