Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவல்லிக்கேணி பகுதியில் உதயநிதி எம்.எல்.ஏ இன்று செய்த பணிகள்!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (20:25 IST)
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி எம்எல்ஏ தினந்தோறும் சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்\று திருவல்லிக்கேணியில் செய்த பணிகள் குறித்து தனது டுவிட்டரில் உதயநிதி குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
திருவல்லிக்கேணி பகுதி, 116 அ வட்டம் வேணுகோபால் தெரு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை இன்று பார்வையிட்டோம். முகக்கவசம், கிருமிநாசினி, சத்து மாத்திரை..உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை வழங்கி கவனமுடன் இருக்குமாறு கேட்டு கொண்டோம். 
 
திருவல்லிக்கேணி பகுதி, 116 வது வட்டம் கெனால் தெரு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று தொடங்கி வைத்தோம். அப்போது, முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி உற்சாகமூட்டினோம்.
 
பருவமழைக்கு முன்பாக கழிவுநீர் பாதைகளை சீரமைக்க பெருநகர குடிநீர் வழங்கல்&கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மாநகராட்சி மண்டலம் 9முழுவதும் தீவிர தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவில் நடைபெற்ற அப்பணியை பார்வையிட்டேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments