நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நெளிதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக பள்ளிகள் சமுதாய கூடங்கள் வழிபாட்டு தலங்கள் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மசூதியில் இடம் அளித்ததற்கு நன்றி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிராம மக்கள் 200 பேர் அங்குள்ள மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மக்களை சந்தித்து அவர்கள் ஊரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கேட்டறிந்தோம். மேலும், அவர்களுக்கு எல்லா வகையிலும் கழக அரசு உதவிகளை செய்திடும் என்று உறுதியளித்தோம்.
பேரிடர் நேரங்களில் மனிதநேயமே முன் நிற்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மசூதியில் இடமளித்த நல்லுள்ளங்களுக்கு என் அன்பும், நன்றியும்