கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, இந்தியாவில் ’ஒரே நாடு ஒரே மொழி’ என்ற ஒரு கோஷத்தை முன்வைத்து, இந்தியா முழுக்க ஹிந்தி மொழியை பரப்ப இருப்பதாக அறிவித்து இருந்தார்
இந்த அறிவிப்புக்கு எதிர்பார்த்தது போலவே திமுக உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தென்னிந்தியா முழுவதும் கிளம்பிய எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக இந்த முயற்சியில் இருந்து அமித்ஷா பின் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழ் ஆங்கிலம் மட்டுமே தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாக இருக்கும் என்றும் அறிவித்து இருந்தது. இதனை அடுத்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ’மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழக அமைப்பு நாளான நேற்று, போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகை சீட்டில் தமிழை காணவில்லை. ‘இந்தியே தேசியமொழி’ என அமித்ஷா பேசியபோது, ‘இருமொழி கொள்கையை கடைபிடிக்கிறோம்’ என்றார் முதல்வர். அந்த இருமொழி என்பது இந்தி-இங்கிலீஷே என சொல்லாமல் விட்டது ஏன்? என்று கூறியுள்ளார்
தமிழகத்தில் இரு மொழி என்பது தமிழ் மற்றும் இந்தி என்பதுதான் இருமொழியா? என உதயநிதி ஸ்டாலின் கிண்டலுடன் கேள்வி எழுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது