Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனுக்கும் இளைஞரணி சட்டையை மாட்டிவிட்ட உதயநிதி !!

Advertiesment
மகனுக்கும் இளைஞரணி சட்டையை மாட்டிவிட்ட உதயநிதி !!
, சனி, 8 மே 2021 (11:20 IST)
உதயநிதி ஸ்டாலின் தனது மகனுக்கு இளைஞரணி சட்டையை அணிவித்திருப்பது சமூக வலைத்தளத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. 

 
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சியினர், ஸ்டாலின் குடும்பத்தார், திமுக முக்கிய உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். ஸ்டாலின் பதவியேற்ற போது அவரது மனைவி துர்காவும், அகன் உதயநிதி ஸ்டாலினும் ஆனந்த கண்ணீர் விட்ட நிகழ்வுகளும் நடந்தது. 
 
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது தந்தைக்கு புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக - தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும் என பதிவிட்டிருந்தார். 
 
இந்த புகைப்படத்தில் உதயநிதியுடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் இருந்தனர். இதில் உதயநிதியின் மகன் தனது தந்தையை போல இளைஞரணியை குறிக்கும் படத்தை பொருத்திய சடையை அணிந்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கின்போது தடுப்பூசி போட பயணம் செய்யலாமா?