Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-பாஸ் ரத்து செய்யாததற்கு இப்படியும் ஒரு காரணம்: காண்டாக்கும் உதயநிதி!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (17:21 IST)
தமிழகத்தின் ஏன் இ-பாஸ் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள காரணம் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.   
 
இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.   
 
இ-பாஸ் முறையை ரத்து செய்யலாமா? வேண்டாமா? என முதல்வர் வரும் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் ரத்து செயப்படாதது இதற்காக தான் என ஒரு காரணத்தை உதயநிதி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
திமுக தேர்தல் பணிகளை தொடங்கக் கூடாது என்பதற்காகத்தான் இ-பாஸ் முறையை தமிழக அரசு நீட்டித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களை எங்களால் சந்திக்க இயலவில்லை. அதனால்தான் இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கூடிய விரைவில் இதுதொடர்பாக அறிவிப்புவரும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments