தேசியகொடி அவமதிப்பு விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்ததும், ஸ்டலின் செய்ததும் ஒன்று என்பதை போல பேசியுள்ளார் பிரேமலதா.
நேற்று விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பிரேமலதா பேசிய போது, கூட்டணி குறித்து சில சலசலப்பு கருத்துக்களை வெளிப்படுத்தினார். இதனோடு, தேசியக்கொடியை அவமதித்ததாக எஸ்வி சேகர்மீது வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்மீதும் வழக்கு தொடரப்பட்டது.
எஸ்வி சேகருக்கு ஒரு நியாயம், ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? முதன் முறையாக அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றியிருக்கிறார்கள் ஸ்டாலின், அவரும் அவருடன் இருந்த யாரும் கொடிக்கு மரியாதை செலுத்தவில்லை.
ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது கூடத் தெரியவில்லை. தேசிய கொடிக்கு உரிய மரியாதை செலுத்தாமல் ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என பேசினார்.
பிரேமலதா கூறியது சரி என்றாலும் எஸ்.வி.சேகர் செய்ததும் ஸ்டாலின் செய்ததும் ஒன்றலல்ல என சமூக வலைத்தளங்களில் கமெண்டுக்கள் வெளியாகி வருகின்றன.