சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியை தேர்வு செய்தது ஏன்? உதயநிதி பதில்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:02 IST)
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தது ஏன் என உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. கூட்டணி முடிவுகளுக்கு முன்னதாகவே தேர்தல் பரப்புரையில் பிஸியாகிவிட்ட திமுக தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. 
 
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் – திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். திமுகவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கருதப்படுகிறது இந்த தொகுதிகள். இந்த இரு தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தது ஏன் என உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். 
 
அதில் அவர் கூறியதாவது, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி செயளாலர்கள், மாவட்ட செயலாளர் இந்த தொகுதியில் நான் போட்டியிட விருப்பத்தை தெரிவித்தனர். எளிதில் நிச்சியமாக வெற்றி பெறலாம் என தெரிவித்தனர். அதனால்தான், இந்தத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன். இந்தத் தொகுதியில் என்னுடைய பிரசாரத்தைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு உள்ளது. என்னுடைய வெற்றியை மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'டிட்வா' புயல் பாதிப்பு: கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் உணவின்றி தவிப்பு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.95,000-ஐ தாண்டியது!

வட தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்: 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

இத பண்ணா நீங்கதான் நிரந்த முதலமைச்சர்!.. உதயநிதிக்கு பார்த்திபன் கொடுத்த ஐடியா!...

விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: கோபியில் செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments