தமிழகத்தில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களாக திமுக தலைவர் முக ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்
அந்த வகையில் சற்று முன் அவர் திமுக தலைவர் முக ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
தினம் தினம் ஊர் ஊராய் சென்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை செய்வோம், இதை செய்வோம், அதை ரத்து செய்வோம், என்றெல்லாம் பொய்யும் புரட்டுமாய் பேசிவரும் ஸ்டாலினும், உதவாத நிதியும், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 8 ஆண்டுகள் அங்கம் வகித்து, தமிழகத்திற்கு உருப்படியாக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? செய்த சாதனைகள் என்ன? என்று பட்டியலிடமுடியுமா. காங்கிரசும், திமுகவும் இது குறித்து விவாதத்திற்கு தயாரா?