Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அமைச்சருடன் உதயநிதி திடீர் சந்திப்பு: இம்முறை மாணவர்களுக்க்காக...!!

அதிமுக அமைச்சருடன் உதயநிதி திடீர் சந்திப்பு: இம்முறை மாணவர்களுக்க்காக...!!
Webdunia
புதன், 20 மே 2020 (15:56 IST)
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள். 
 
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் முதலமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.
 
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 10 ஆம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி. ஆனால் தனிமனித விலகளுடன்கூடிய சுகாதாரமான வாகனம், வகுப்பறை உள்ளிட்ட கொரோனா பரவலுக்கு எதிரான பெற்றோர்- ஆசிரியர் - மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட்டால்தான் அரசின் நடவடிக்கை முழுமையடையும் என பதிவிட்டார். 
 
இதோடு நிறுத்திக்கொள்ளாமல் இன்று அமைசர் செங்கோட்டையனை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் கொரோனா பாதிப்பு சீராகி இயல்பு நிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 
 
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இது குறித்து நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார் எனவும் உதயநிதி அமைச்சருடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அதனோடு தனது டிவிட்டர் பக்கத்தில், 
 
வரவேற்று கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி. 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மனநிலையை தேர்வுக்குத் தயார்ப்படுத்திடவும், தேர்வெழுத வருபவர்களை நோய்த்தொற்றிலிருந்து காத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments