'ஈபிஎஸ்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர்': துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Mahendran
புதன், 10 செப்டம்பர் 2025 (11:28 IST)
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தான் தொடர வேண்டும் என்று கூறினார்.
 
"அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஈபிஎஸ்தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
 
அதிமுகவினர் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியாது, ஆனால் நான் முன்மொழிகிறேன், நீங்கள் தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று உதயநிதி குறிப்பிட்டது, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பேச்சு, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

டிரம்ப் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கருத்து..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments