குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி பெண்கள் மனதில் உள்ள கோரிக்கை என்னவென்று எனக்குத் தெரியும் என்றும் குடும்ப தலைமை தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 இன்னும் அதிகபட்சம் ஐந்து மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எடுத்து உள்ளார் என்றும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்யுமாறும் அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.