Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் சுற்றுப்பயணம் – உதயநிதியின் அடுத்த மூவ் !

விரைவில் சுற்றுப்பயணம் – உதயநிதியின் அடுத்த மூவ் !
, சனி, 6 ஜூலை 2019 (15:00 IST)
திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தலைவர் பொறுப்பை அவரது மகன் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தற்போது முக ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்துள்ளது.இது குறித்து கட்சிக்குள் மறைமுகமாகவும், சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திமுக வாரிசு அரசியலை மையப்படுத்தி செயல்படுவதாகவும், கட்சியின் அடிமட்டத்தில் இருந்து தொண்டு செய்து வந்தவர்களுக்கு எந்தவித பதவியும் கொடுக்காமல், ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்து உதயநிதிக்கு பதவி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் தனது அடுத்த மூவ்களைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இளைஞரணி அலுவலகமான அன்பகம் சென்ற உதயநிதி அங்கு நிரவாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதை முடித்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விரைவில் இளைஞர்களை அதிகமாக சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டம் உள்ளதாகக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்பர் ஓன் ட்ரெண்டில் சூர்யாவின் "சிறுக்கி சீனிக்கட்டி சிணுங்கி சிங்காரி" பாடல்!