Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதயநிதி எம்.எல்.ஏவிடம் இன்று நிதி கொடுத்தவர்களின் விபரங்கள்!

Advertiesment
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதயநிதி எம்.எல்.ஏவிடம் இன்று நிதி கொடுத்தவர்களின் விபரங்கள்!
, ஞாயிறு, 11 ஜூலை 2021 (20:24 IST)
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதயநிதி எம்.எல்.ஏவிடம் இன்று நிதி கொடுத்தவர்களின் விபரங்கள் குறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
Image Infotainment Limited நிறுவனத்தின் நிறுவனர்-நிர்வாக இயக்குநர் கே.குமார் அவர்கள் மற்றும் ICAT கல்லூரியின் இயக்குநர்-முதல்வர் லக்ஷ்மி குமார் அவர்களிடமிருந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை இன்று பெற்றுக்கொண்டேன். அன்பும் நன்றியும்.
 
கொரோனா ஒழிப்புக்காக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு சென்னை வடகிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் அவர்களின் பேரக்குழந்தைகள் ஆனி சில்வியா, ஆடிரி சீலியா, ஜோயல் யெசூவா, ஜோகன் யூகரிஸ்ட் வழங்கிய உண்டியலை மா.பொறுப்பாளர் அண்ணன்  சுதர்சனம் MLA என்னிடம் வழங்கினார். நன்றி.
 
 
முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வடசென்னை சிறு-குறு தொழில் முனைவோர் சங்கம் ரூ.5,26,222-க்கான காசோலையை இன்று வழங்கினர். மேலும் அப்பகுதி பிரமுகர்கள் வழங்கிய ரூ.4,63,778க்கான காசோலைகளை சென்னை வடகிழக்கு மா.பொறுப்பாளர் அண்ணன்  சுதர்சனம்  MLA மூலம் பெற்றுக்கொண்டேன். நன்றி.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள்: டாக்டர் ராமதாஸ்