Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் ஸ்டாலினுக்கு வெற்றி வாழ்த்து கூறிய உதயநிதி!

முதல்வர் ஸ்டாலினுக்கு வெற்றி வாழ்த்து கூறிய உதயநிதி!
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (19:03 IST)
முதல்வர் ஸ்டாலினுக்கு வெற்றி வாழ்த்து கூறிய உதயநிதி!
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து திமுகவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
குறிப்பாக திமுக தலைவரை பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ திமுக தலைவர் மகனுமான உதயநிதி தனது தந்தையும் முதல்வருமான முக ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக அரசுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரமே நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி. வாக்களித்தவர்களுக்கு நன்றி. வெற்றிக்கு உழைத்த முத்தமிழறிஞரின் உடன்பிறப்புகளுக்கு என் அன்பு. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப உழைக்கவேண்டியது நம் கடமை. வாழ்த்துகள்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்: வெற்றி பெற்ற உமா ஆனந்தன் பேட்டி