Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலின் சாக்லேட் பாய் – அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (15:31 IST)
சென்னை ஆயிரம் விளக்கும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் நேற்று டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் திரும்பவந்த கு.க.செல்வம் தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தொகுதி மேம்பாடு குறித்து பேச சென்றதாகவும் கூறினார்.

ஆனால் கு.க.செல்வம் டெல்லி சென்றது திமுக தலைமைக்கே தெரியாது என கூறப்படுகிறது. திமுக எம்.பிக்கள், தலைமை ஆகியவற்றிடம் இதுகுறித்து விவாதிக்காமல் நேரடியாக டெல்லி சென்றதும் பாஜக தலைவரை சந்தித்ததும் ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கு.க.செல்வத்தை திமுகவின் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அதன்படி கு.க.செல்வம் திமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு திமுக தலைமை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு சென்ற கு.க.செல்வம் அங்குள்ள ராமர் திருவுறுவத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். அவருடன் கே.டி.ராகவன் உள்ளிட்ட சில பாஜக பிரமுகர்களும் இருந்துள்ளனர். கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வம் ”ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி குறித்து கேட்கவே டெல்லி சென்றேன். திமுக என்னை பதவியிலிருந்து நீக்கினால் எனக்கு கவலை இல்லை. திமுகவில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறிவிட்டது” என பேசியிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது : கு.க. செல்வத்தை சாக்லெட் கொடுத்து ஏமாற்றிவிட்டார் என்று சாக்லெட் பாய் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும்  திமுக மூத்த தலைவர் துரைமுருகன் அதிமுகவுக்கு வந்தால் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத்தயார் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments