Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவுக்கு அதிமுகவிலோ, ஆட்சியிலோ இடமில்லை! – அமைச்சர் ஜெயக்குமார் ஓபன் டாக்!

Advertiesment
சசிகலாவுக்கு அதிமுகவிலோ, ஆட்சியிலோ இடமில்லை! – அமைச்சர் ஜெயக்குமார் ஓபன் டாக்!
, வெள்ளி, 10 ஜூலை 2020 (14:09 IST)
சிறையிலிருந்து சசிகலா விடுதலையானதும் அதிமுகவில் இணைவாரா என்பது குறித்த பேச்சுகள் எழுந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனை காலம் அடுத்த ஆண்டில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று நன்னடத்தை அடிப்படையில் சசிகலா விடுதலையாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. தற்போது சசிகலா விரைவில் வெளியாவார் என்றாலும், அதற்கு பிறகான தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவாரா என்பது குறித்து நலப்பணி திட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் “சசிக்கலா விடுதலையாகி வந்த பிறகு அதிமுகவை வழிநடத்துவாரா என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். இதனால் சசிகலாவுக்கு அதிமுகவில் வரவேற்பு இருக்கலாம் என பேசிக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மிகவும் உறுதியாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ”சசிகலா விடுதலையானாலும் அதிமுகவில் அவரை இணைத்து கொள்வதோ, ஆட்சியதிகாரத்தில் இடமளிப்பதோ நடவாத காரியம்” என கூறியுள்ளார். சசிகலா குறித்து அதிமுகவினரிடையே இருவேறு கருத்துகள் இருந்து வருவதால் சசிகலா வருகை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

19 வயது இளம்பெண்ணை பேருந்தில் இருந்து தூக்கியெறிந்த கொடூரம்: சாலையில் உயிரிழந்த பரிதாபம்