Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருளை அகற்றி ஒளியை கொடுத்த உதய சூரியன்: செந்தில் பாலாஜி

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (14:04 IST)
டிடிவி தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய செந்தில் பாலாஜி நீண்ட காலம் கழித்து திமுகவில் இணைந்துள்ளார். இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு தன் தொண்டர்களின் ஆரவாரத்துடன் சென்ற அவருக்கு திமுக தலைவர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
பின் திமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.பின் ஸ்டாலின் அவர்க்கு சல்வை போர்த்து கட்சி உறுப்பினராக ஏற்றுக்க்கொண்டார்.
 
பின் அண்ணா அறிவாலயத்தில் சூழ்ந்திருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:
அப்போது அவர் கூறியதாவது:
 
’நான் முன்பு இருந்த கட்சியின் தலைமை மற்றும் தலைவர்களை பற்றி பேச முடியாது. டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆதங்கத்தில் கூறிய கருத்துக்கு பதில் கூற முடியாது. கரூர் மக்கள் விருப்பப்படி நான் திமுகவில் இணைந்துள்ளேன். அதற்கு அனைத்து தொண்டர்களும் உறுதுணையாக இருப்பார்கள். 
 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டாம், தேர்தலை சந்திப்போம் என   நான் தான் முதலில் தினகரனிடம் கூறினேன்.
 
தொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவர். அந்த ஆற்றல் ஸ்டாலினுக்கு உண்டு. தமிழக மக்கள் ஸ்டாலினை அடுத்த முதலவராக்க தயாராகி விட்டார்கள்.
 
அதிமுக ஒரு மூழ்கும் கப்பல் .இந்த ஆட்சி கவிழ்ந்ததும் இபிஎஸ் விவசாயத்திற்கு சென்று விடுவார். அதிமுக,அமமுக வில் உள்ள முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைய இருக்கிறார்கள்.
 
தமிழகத்தில் உள்ள 3 கோடி இளைஞர்களின் விருப்பம் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதுதான்.மேலும் 17 தகுதிநீக்க எம்எல் ஏக்களை திமுகவுக்கு நான் அழைக்கவில்லை அது அவர்கள் விருப்பம்.
 
அன்பிற்குரிய தலைவர் தளபதி அவர்களின் தலைமையின் கிழ் பணியாற்ற கரூர் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளோம்.
 
இவ்வளவு நாள் மனதில் இருந்த இருளை அகற்றி ஒளியை கொடுத்ததுள்ளது உதய சூரியன். ‘ இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யின் தவெகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட மூதாட்டிகள்.. வரவேற்ற இளைஞர்கள்..!

சிரியாவில் அசத் ஆட்சி வீழ்ச்சி - ஆக்கிரமிப்பு கோலன் குன்று குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்

வீட்டில் ஜெராக்ஸ் மிஷின் வைத்து 100 ரூபாய் கள்ளநோட்டு அடித்த நபர்.. சுற்றி வளைத்து பிடிப்பு..!

Selfie Camera தேவையில்ல.. வேற லெவல் Optionஉடன் களமிறங்கிய Lava Blaze Duo 5G! - விலை இவ்வளவுதானா?

நாய் மீது மோதிய அரசு பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments