Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பிக்பாக்கெட்டில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (13:16 IST)
சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபரை ஏமாற்றி பணம் திருடிய 2 திருநங்கைகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த தொழிலதிபரான டேவிட் பால்ராஜ் வங்கியில் இருந்து ரூ.7 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரில் சென்றுகொன்றிருந்தார். அப்போது வழியில் கடைக்கு சென்று புறப்பட்ட பால்ராஜிடம் 2 திருநங்கைகள் ஆசிர்வாதம் செய்வதாகக் கூறி, 50 ரூபாயை பெற்றனர். காரில் இருக்கும் பணப்பையையும் தொட்டு ஆசிர்வாதம் செய்வதாக திருநங்கைகள் கூறினர்.
 
இதனை நம்பிய டேவிட் பால்ராஜ் பணப்பையை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது திருநங்கைகள் பால்ராஜின் கவனத்தை திசைதிருப்பி, பணப்பையிலிருந்த ரூ.54 ஆயிரத்தை திருடிக்கொண்டனர்.
இதனையறியாத பால்ராஜ், வீட்டிற்கு சென்று பார்த்தபோது பையிலிருந்த 54,000 திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து டேவிட் பால்ராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
 
அதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருநங்கைகளான புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அலினா, சூளை சாமிபிள்ளை தெருவைச் சேர்ந்த சுமித்ரா என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 50,000 ரூபாயை கைப்பற்றிய போலீஸார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments