Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. நெல்லையில் 2 ஆசிரியர்கள் கைது..!

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (22:13 IST)
நெல்லையில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வேலையாகி உள்ளது. 
 
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வரும் நிலையில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் வந்தது. 
 
இந்தப் புகாரை அடுத்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை செய்ய உத்தரவிட்ட நிலையில் தற்காலிக ஆசிரியர் ராபர்ட் மற்றும் நிரந்தர ஆசிரியர் நெல்சன் ஆகிய இருவரும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
 
இதனை அடுத்து நெல்சன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் ராபர்ட் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ராபர்ட் மற்றும் நெல்சன் ஆகிய இருவரையும் போக்சோ  சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்