Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 13 ஜூன் 2024 (10:14 IST)
புதுவையில் விஷவாயு தாக்கிய பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு மட்டும் ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஷவாயு தாக்கியதில் ஒரு மாணவி உள்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரண உதவி குறித்து அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புது நகரில் விஷவாயு தாக்கிய பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது மட்டுமின்றி ஒரு மாணவியும் இறந்துள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
அந்த இரண்டு பள்ளிகள் ஜூன் 18ஆம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments