Publish Date: Tue, 15 Oct 2024 (19:55 IST)
Updated Date: Tue, 15 Oct 2024 (19:56 IST)
கனமழை எச்சரிக்கையால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் நாளை அதாவது அக்டோபர் 16ஆம் தேதி இயங்காது என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்களில் நாளை முன்பதிவு செய்தவர்கள் வேறு நாட்களை தேர்வு செய்ய அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார்
அதேபோல் தொடர் மழை காரணமாக நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.