கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ஹோட்டல் உரிமையாளர், மீன் வியாபாரி கைது..!

Siva
ஞாயிறு, 23 ஜூன் 2024 (09:33 IST)
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர்களான ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல், மீன் வியாபாரி கண்னன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் மாதேஷுக்கு மெத்தனால் கடத்த உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சக்திவேல் பண்ருட்டி பகுதியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார் என்றும், கண்ணன் மீன் வியாபாரம் செய்து கொண்டே கள்ளச்சாராயம் கடத்தி வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தீவிர விசாரணைக்கு பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் இன்று காலை சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமார் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments