Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் ஊற்றி உயிரோடு பெண் எரித்துக் கொலை : மதுரையில் பயங்கரம்

பெட்ரோல் ஊற்றி உயிரோடு பெண் எரித்துக் கொலை : மதுரையில் பயங்கரம்
, வியாழன், 5 மே 2016 (12:11 IST)
உயிரோடு ஒரு பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு, ஒரு கும்பல் தப்பிய விவகாரம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மதுரை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் சித்ரா(28). இவருக்கும், சென்னை அடையாரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகன் என்பவருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ரிக்கி(7) என்ற மகனும், ரியா, ரிஷா (8) என்ற இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர்.
 
மோகனுக்கும், சித்ராவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவருமே விவாகரத்து கேட்டு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நேற்று முன்தினம், இது சம்பந்தாக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, சித்ரா காரில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
 
அவர் காரில் இருந்து இறங்கி வீட்டின் கதவை திறப்பதற்குள், திடீரென்று அங்கு வந்த இரண்டு பேர் அவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
 
அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கதினர், அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சித்ரா பரிதாபமாக மரணமடைந்தார்.
 
இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சித்ராவின் கணவர் இதை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், மதுரையில் தங்கியிருந்த அவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், சித்ராவை தீ வைத்து எரித்த மர்ம நபர்களையும் தேடி வருகிறார்கள்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்கும்: இணையத்தில் கசியும் தகவல்கள்!