Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாம சேந்து வாழ முடியாது..! ஒரே நாளில் இரண்டு கள்ள காதல் ஜோடிகள் தற்கொலை!

Advertiesment
poison
, வியாழன், 2 ஜூன் 2022 (12:22 IST)
கள்ள காதலில் இருந்த வெவ்வேறு ஊரை சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் மயிலேறி. டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ள இவருக்கும் அப்பகுதியில் தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மகராசி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்குமே வெவ்வேறு நபர்களுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களுக்கிடையே கள்ள காதல் மலர்ந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதை இருதரப்பு உறவினர்களுமே கண்டித்து வந்துள்ளனர்

சமீபத்தில் இந்த பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மகராசியின் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் மயிலேறியும், மகராசியும் மாயமாகினர்.

நேற்று மாலை வெள்ளாரம் கிராமம் அருகே காட்டுப்பகுதியில் அவர்கள் பிணமாக கிடப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.

இதேபோல தாராபுரம் அருகே எருக்கலாம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும், நடராஜ் என்பவரின் மனைவி மாரியம்மாளும் கள்ள காதலில் இருந்துள்ளனர். இதுகுறித்து உறவினர்கள் கண்டித்ததால் அவர்களும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கள்ள காதல் ஜோடிகளின் இந்த தற்கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென குறைக்கப்பட்ட கோடை விடுமுறை! – அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!