Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பவானி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி!

Advertiesment
பவா‌னி ஆறு

Erode Velusamy

, வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (13:21 IST)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள நன்செய் புளியம்பட்டியில் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழிந்துள்ளனர். 
நன்செய் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் 6 பேர் பவானி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளனர். இந்த மாணவர்களில் சிலருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருந்துள்ளதால் மாணவர்கள் முன்னேறிச் சென்று குளித்துள்ளனர். அப்போது ஆற்றின் சேற்றில் சிக்சிய மாணவர்கள் இரண்டு பேரால் மேலெழும்ப முடியாமல் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 
 
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு மாணவர்களை தேடும் பணி தீவிரமடைந்தது. சற்று நேரத்திற்கு முன்னதாக இரண்டு மாணவர்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 
 
இதனையடுத்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil