Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை மின்கம்பம் சின்னத்தில் ஓபிஎஸ் அணி போட்டி: அம்மா அதிமுக அணியின் பெயர்!

இரட்டை மின்கம்பம் சின்னத்தில் ஓபிஎஸ் அணி போட்டி: அம்மா அதிமுக அணியின் பெயர்!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (11:09 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமா இரட்டை இலை சின்னம் அந்த கட்சி இரண்டு அணிகளாக பிளவு பட்டுள்ள காரணத்துக்காக தற்போது முடக்கப்பட்டுள்ளது. அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ், சசிகலா அணியினர் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


 
 
மேலும் இரு அணியினரும் புதிய சின்னம் மற்றும் தங்கள் அணிக்கு புதிய பெயரையும் தேர்வு செய்ய இன்று காலை 10 மணிக்கு தேர்தல் ஆணையத்துக்கு வரலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தை இன்று காலை தேர்தல் ஆணையத்தை அனுகி தங்கள் அணியின் பெயரையும், சின்னங்களையும் சமர்ப்பித்தனர்.
 
இரு அணியினரும் இரட்டை மின்கம்பம் சின்னத்தை கேட்டு தேர்தலை ஆணையத்திடம் கடுமையாக மல்லுக்கட்டினர். இருப்பினும் ஓபிஎஸ் அணியினரின் கடும் முயற்சிக்கு பின்னர் இந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒதுக்கியது.
 
மின்கம்பம் சின்னத்துடன் கூடுதல் சின்னமாக ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தையும் சசிகலா அணி கேட்டிருந்தது. இதில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் அவர்களுக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதனையடுத்து சசிகலா அணி பலக்கட்ட ஆலோசனைக்கு பின்னர் ஆட்டோ சின்னம் வேண்டாம் என கூறி தொப்பி சின்னத்தை கேட்டனர். அதன் படி அவர்களுக்கு தொப்பி சின்னம்வழங்கப்பட்டது. மேலும் அஇஅதிமுக புரட்சித்தலைவி அம்மா பெயரில் ஓபிஎஸ் அணியும், அஇஅதிமுக அம்மா என்ற பெயரில் சசிகலா அணியும் போட்டியிட உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

56 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்.. குற்றவாளி மர்ம மரணம்..!

விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை.. எச் ராஜா

செந்தில் பாலாஜி விடுதலை: அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர், அமைச்சர்கள் நீக்கம்?

சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!

செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த 4 நிபந்தனைகள்: என்.ஆர்.இளங்கோ விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments